நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது

சர்வதேச அங்கீகாரம்

“கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் அமுலாக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து திருப்தி அடைய முடியும். இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது” என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்றிரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது. தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்காமல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.

அரசாங்கம் நீதித்துறையின் நடுநிலையை பாதுகாப்பதால், சர்வதேச மனித உரிமை பேரவையின் நிலைமையை சாதகமாக மாற்ற முடிந்துள்ளது.

வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த காணிகளில் 80 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

சமகாலத்தில் தூய்மையான தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் தேவை உள்ளது. இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சீரான ஒழுக்கத்துடன் கட்டுக் கோப்பாக செயற்படுகிறது. சிறந்த முன் உதாரணங்களுடன் நேர்மையான அரசியல்வாதிகள் உருவாவது அவசியம்.

எதிர்வரும் தேர்தல்களில் தூய்மையான அரசியல்வாதிகளை தமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பது வாக்காளர்களின் பொறுப்பாகும். ஜனாதிபதி என்ற ரீதியிலும், அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் தேர்தல் சட்ட திட்டங்களையும், ஆலோசனைகளையும் முறையாக அமுலாக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]