நல்லிணக்க அலைவரிசை

இலங்கை தேசிய தொலைக்காட்சியான ருபாவாஹினியில் 3வது அலைவரிசையாக தமிழ் பேசும் 25 வீத மக்களுக்காக ” நல்லிணக்க அலைவரிசை” ஆரம்பிப்பாதற்காக ஜனாதிபதியின் இரண்டாவது ஆண்டுகள் பதவியேற்பை முன்ணிட்டு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா வினால் அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்து 180 மில்லியன் ருபா நிதியும் புதிய தொலைத் தொடா்பு (frequency channel ) அலைவரிசையும் ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

Rupavahini new Tamil Channel

இங்கு உரையாற்றிய ருபாவாஹினித் தலைவா் ரவி ஜெயவா்தன தெரிவிததாவது –

இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசும் 25 வீத தமிழ், முஸ்லீம் மக்களுக்காக ருபாவாஹினி ஆரம்பிக்கப்பட்டு 35 வருடகாலமாக தமிழ் மொழி மூலம் அவா்களது கலை கலாச்சார மற்றும் நடப்பு விவகாரங்களை சரியான முறையில் வழங்க தவறிவிட்டது. இக் கருத்திளை கடந்த வருடம் ஜனாவரி 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடும்போது இக் கோரிக்கையை முன்வைத்தோம். இதனை உடன் அமுல்படுத்த ஜனாதிபதி அவா்கள் தமிழ் மக்களுக்காக ஒரு அலைவரிசை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தாா். . அதனை உடன் அமுல்படுத்துமாறும் அதற்கான அலைவரிசை மற்றும் திரைசேரி மூலம் 180 மில்லியன் ருபாவையும் ஜனாதிபதி பெற்றுக் கொடுத்துள்ளாா் அத்துடன் அமைச்சா் ்மனோ கனேசன் நேத்ரா அலைவரிசையில் கிறிக்கட் மற்றும் வேறு நிகழ்ச்சிக்காக பயன்படுத்துவதனால் நேத்ரா அலைவரிசை ஊடாக உரிய நிகழ்ச்சிகளை தமிழ் மக்களுக்காக கொடுக்க முடியவில்லை. ஓர் அலைவரிசையை ஆரம்பிக்குமாறும் அமைச்சா் மனோ சுட்டிக்காட்டி வந்தாா். அத்துடன் அவா் கிளிநொச்சியில் ஒரு உப கலையகம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குரிய கட்டிட வசதிகளையும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்து்ளளாா். அதனையும் உடன் இந்த வருடத்திற்குள ஆரம்பிக்க முடியும். கிளிநொச்சி ,யாழ் மக்கள் கொழும்பு வராது அங்கிருந்தே தமது ஒளிப்பதிவுகளை பதிவு செய்யமுடியும் எனவும் ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் ரவி ஜெயவா்த்தன தெரிவித்தாா்.

Rupavahini new Tamil Channel

இன்று (8) திகதி ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் மேற்படி அலைவரிசைக்காக தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளா் சிவஞானஜோதிக்கும் – ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் ரவி ஜெயவா்த்தன, வுக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. அத்துடன் மாதாந்தம் ருபாவாஹினிக் கூட்டுத்தபாணம் 10 மில்லியன் ருபாவுக்கு அதிகாமாக மிணசாரக் கட்டணத்தினை செலுத்தி வருகின்றது. இதன் நிமித்தம் சூரிய பல சக்தி திட்டத்தின் கீழ் இலங்கை மிண்சார சபையினால் சூரிய பல சக்தித்திட்டத்திற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

Rupavahini new Tamil Channel

இந் நிகழ்வுக்கு அமைச்சர்களான கயாந்த கருநாதிலக்க, மனோ கனேசன், ரவி கருநாயக்க, ரண்ஜித் சியாலம்பிட்டிய, பிரதியமைச்சா்களான அஜித் பெரேரா, பரனவித்தாரண ஆகியோறுடன் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளா் சிவஞானஜோதியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.

Rupavahini new Tamil Channel