நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன

கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்ற நிலையினை நாங்கள் பார்க்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (11) கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய 490 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
அன்மையில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீpட்சை, தாதியர் தேர்வுப் பரீட்சை, தபால் உள்ளக கணக்காய்வு பரீட்சை தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

வெளிமாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண சிற்றூழியர்கள் முதல் அனைத்துத் துறைகளிலும் தென்னிலங்கையில் உள்ளவர்களை கொண்டு இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில் தேசிய மற்றும் மாகாண நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழர்களுடைய நிலங்கள் வளங்கள் பலவிதத்திலும் அபகரிக்கப்படுகின்ற நிலமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

வன இலாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எமது மக்களின் காணிகளை தங்களுக்குரியது என அபகரிக்கிறார்கள். மறுபுறம் மகாவலி, மாதுறுஓயா திட்டம் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

கடந்த ஒரு நுற்றாண்டில் கிழக்கு மாகாணத்தில் 58.9 சதவீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 39.79 சதவீதமாக காணப்டுகிறது. 33 தவீதமாக இருந்த முஸ்லிம்கள் 36.75 சதவீதமாகவும் 4.5 சதவீதமாக இருந்த சிங்களவர்கள் 23.15 சதவீதமாக அதிகரித்துள்ளார்கள். தமிழர்களுடைய சனத்தொகை 20 சதவீதமாக குறைந்துள்ளது.

தங்களது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏனைய சமூகங்கள் எவ்வாறு திட்டமிட்டு செயற்படுகின்றார்களோ அதேபோன்று தமிழர்கள் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று வருட காலத்திலே செங்கலடி மத்திய கல்லூரியில் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இது. செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளில் தவறுதலான புரிதல் காரணமாக எங்களுக்கும் கல்லூரி சார்ந்த நிருவாகத்திற்குமிடையில் ஒரு சில முரண்பாடுகள் இருந்தன. நேரடியான கலந்துரையாடல்கள் இல்hததனால் அவ்வாறான முரண்பாடுகள் இருந்திருக்கலாம்.

இன்றைய இளைஞர்கள் தன்னைப்பற்றி, தான் சார்ந்த குடும்பத்தைப்பற்றி, சமூகத்தைப்பற்றி சிந்திப்பவர்களாக மாற வேண்டும். இந்த நிலை தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் குறைவு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]