நல்லிணக்கமும் தலமைத்துவமும் என்ற தொனிப்பொருளின் கீழ் செயலமர்வு!!

நல்லிணக்கமும் தலமைத்துவமும் என்ற தொனிப்பொருளின் கீழ் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில்

அநுராதபுரம் சொர்னபாலி மகாவித்தியாலயம், அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்.இந்து மகளீர் கல்லூரி, யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான செயலமர்வு வேம்படி மகளீர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

இன மத வேறுபாடற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலைகளில் மாணவர்களின் மத்தியில் கலாச்சார புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி சிறந்த தலமைத்துவம் மற்றும் நல்லிணக்கமுடைய சமுதாயத்தை கட்டியழுப்புவதற்கான இரண்டு நாள் கருத்தமர்வு இரண்டு நாட்கள் இடம்பெற்று வருகின்றது.

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் வேணுகா சண்முக ரட்ணம், அநுராதபுரம் சொர்னபாலி மகாவித்தியாலய அதிபர் றமணி வாசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இந்த நிகழ்வில் 160ற்கும் மேற்பட்ட மாணவிகள் கந்துகொண்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]