நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டமையாலேயே வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தார் போராட்டம் : ராஜித

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டமையாலேயே வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தார் போராட்டம் நடைபெறவுள்ளதாக அரசு தெரிவித்தது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு கூறினார்.

நல்லாட்சி
ராஜித சேனாரட்ன

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

காணாமல் ஆக்கப்பட்டர்கள் தொடர்பில் உரிய பதிலளிக்குமாறு அல்லது இவர்கள் தொடர்பில் மரணச்சான்றிதழ் வங்குமாறு வலியுறுத்தி வடக்கில் நாளை( இன்று) ஹர்த்தார் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நாட்டில் 1971 முதல் காணாமல் போதல் சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்குக்கே இன்னமும் மரணச் சான்றிதல் கொடுக்கப்படவில்லை.

1994 மரணச்சான்றிதல் கொடுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க நடவடிக்கை எடுத்தார். என்றாலும் அவற்றை எளிதில் செய்துவிட முடியாது. காணாமல் போனவருக்கு மரணச்சான்றிதல் கொடுத்த பின்னர் அவர் உயிருடன் ஒருவேளை இருந்தந்தால் அது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

ஜனாதிபதி மாணவர்களுடன் எடுத்துக்கொன்ற புகைப்படமொன்றில் காணாமல் போனதாக கூறப்படும் பெண் பிள்ளையொன்று உள்ளதாக கூறப்பட்டது. எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு பொறிமுறை தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதனை வலியுறுத்தி வடக்கில் நாளை ஹர்த்தார் போராட்டம் நடைபெறவுள்ளது. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளமையாலேயே வடக்கில் இன்று இவ்வாறான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதற்காக அவர்கள் ஒரு ஹர்த்தாலை மேற்கொண்டு அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]