நல்லாட்சி அரசைபோல சிறிய அரசாங்கத்தையும் அறிமுகப்படுத்திக் கொடுப்போம்

நல்லாட்சி அரசைபோல சிறிய அரசாங்கத்தையும் அறிமுகப்படுத்திக் கொடுப்போம்

நல்லாட்சி அரசைபோல

கூட்டிணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மையைப் போன்று சிறிய அரசாங்கத்தையும் அறிமுகப்படுத்திக் கொடுக்கப் போவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பில்லாமல் நாடு என்ற ரீதியில் சிறந்த இலக்கை அடைவதே நோக்கமாக இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இன்று நல்லாட்சி அரசாங்கமானது கூட்டரசாங்கமாகும்.

நடைபெறவிருக்கும் பிரதேசசபைப் தேர்தலின் பின் குட்டி அரசாங்கமும் எம்மோடு இணைவது நல்லதுதானே?´ என்று ஊடகங்கவியளர்களை சந்தித்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே ஒரு வழி இதுவே என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சி வேறுபாடின்றி அதிகாரத்தை பகிர்ந்தளித்து எதிர்காலத்தை நோக்கிச் செல்வதே நாட்டுக்குச் சிறந்ததாகும்.

இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சி அரசியலை ஓருபக்கத்தில் வைத்துவிட்டு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடு என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.

அது பிரதேச சபை என்றோ நகரசபை என்றோ மாநகர சபை என்றோ பிரித்து பார்க்க முடியாது.

இதைவிட்டு அரசியல் செய்யபவர்கள் நாட்டை அழிப்பதற்குசமன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று அலுத்கம பள்ளியகொடல்ல சிறிசுமங்கலராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]