நல்லாட்சி அரசின் பேறுபெறுகள் வெளிவர தொடங்கி விட்டன மக்கள் பொறுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும்

2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீடசை பெறுபேறுகளின் அடிப்படையில் மலையகத்தில் அநேகமான பாடசாலைகளில் பெறுபேறுகள் சிறப்பாக இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கி செயல்படுகின்றமை இதற்கு முக்கிய காரணம்.

இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள மாணவர்கள் 10 வருடங்கள் பல சவால்களை தாண்டி வந்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் பெறுபேறுகளும் தற்பொழுது வெளியாக ஆரம்பித்துள்ளது.இந்த அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களே நிறைவடைந்துள்ளது. அனைவரும் பொறுமையாக இருந்து அனைத்து பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண பரீட்சையின் பின்பு ஹட்டன் கிளை இ-பெஸ்ட் கல்வியகத்தினால் ஏற்பாடுசெயயப்பட்ட 1000 புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மூன்று மாத கால பயிற்சியை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 115 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (10.04.2017) ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இ-பெஸ்ட் கல்வியகத்தின் பணிப்பாளர் பி.எம்.மொகமட் ஜவுபர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இந்த மூன்று மாத பயிற்சியில் தகவல் தொழில்நுட்பம்,ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று முக்கிய பாடங்களுடன் விருப்பத் தெரிவாக கணணி திருத்துதல் வலையமைப்பு (நெட்வேக்) தொலைபேசி திருத்தல் கணணி வரைகலை வடிவமைப்பு அடங்களாக இந்த பயிற்சி நெறியை குறித்த மாணவர்கள் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

அரசாங்கம் என்ன செய்கின்றது என பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள். அரசாங்கம் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திட்டமிட்ட அடிப்படையில் ஆரம்பித்து நடைமுறைபடுத்தி வருகின்றது.அவற்றின் பெறுபேறுகள் தற்பொழுது ஒவ்வொன்றாக வெறிவருகின்றது. அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் மலையகத்தில் குறிப்பிடக்கூடிய அளவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.அதற்காக முழமுயற்சியுடன் பாடுபட்ட கல்வி திணைக்களம் அதிபர்கள் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆனாலும் இன்னும் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.அதற்காக நாம் அனைவரும் இன்னும் அதிகமாக சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.உதவி ஆசிரியர்களுக்கு 4000.00 ரூபா கிடைக்கவில்லை என அவர்கள் என் மீது ஊடகங்கள் மூலமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இன்று அதற்காக பாராளுமன்றத்தில் எங்களுடைய அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து அதற்கான அனுமதியை தற்பொழுது பெற்றுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் அவர்களுக்கான 4000 ரூபா வழங்கப்படும்.அரசாங்கத்தில் எந்த ஒரு விடயத்தையும் உடனடியாக ஒரே இரவில் பெற்றுக் கொள்ள முடியாது.அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கென ஒரு முறை இருக்கின்றது.அதனை பின்பற்ற வேண்டும்.பல இடங்களிலும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும்.அப்படி செய்யாமல் தன்னிச்சையாக கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டதன் காரணமாக தற்பொழுது பலரும் பல இடங்களுக்கும் சென்று வாக்கு மூலம் வழங்குகின்றார்கள். ஒரு சிலர் நீதிமன்றங்களுக்கு செல்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இந்த ஆசிரியர் உதவியாளர்களை உள்வாங்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல குளறுபடிகள் இருக்கின்றது.எனவே நாம் அதனை கூறிக் கொண்டு காலம் தாழ்த்த முடியாது. நாம் அதற்கு ஏற்ற வகையில் தற்பொழுது பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இப்படி படிப்படியாக கல்வி வளர்ச்சிக்கு இந்த அரசாங்கம் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.அடுத்து வெளியாகவுள்ள அனைத்து பரீட்சைகளிலும் எமது பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைந்தால் எமது வெற்றி நீண்டு ஒரு தூரத்தில் இல்லை.க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களை போலவே குறைவான சித்திகளை பெற்ற மாணவாகளையும் ஊக்கப்படுத்துவதற்கு பாடசாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]