முகப்பு News Local News நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பையே சம்பாதித்து வருகின்றது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பையே சம்பாதித்து வருகின்றது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதனூடாக நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகளுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே திங்களன்று அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவது குறித்து அந்தந்த மாகாண சபைகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.

இன்று மாகாண சபைகள் மத்திய அரசால் பந்தாடப்படும் நிலைமை காணப்படுகின்றது, மக்களின் வாக்குகளினால் தெரிவான ஒரு ஆட்சி நிறுவனத்தை அந்த மக்களின் விருப்பின்றி தன்னிச்சையாகவும் எதேச்சாதிகாரமாகவும் கையாளும் உரிமையை மத்தியரசுக்கு மக்கள் வழங்கவில்லை,

இது ஜனநாயக விரோத செயலாகும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். ஆகவே மாகாண சபைகளின் கால எல்லைக்குள்ளோ அதன் நிறைவிலோ தேர்தலை நடத்தும் அதிகாரம் அந்தந்த மாகாண சபைகளுக்கே வழங்கப்பட வேண்டும்,

மாகாண சபைகள் அதில் ஏதேனும் இழுத்தடிப்பு செய்யுமாயின் அதில் மத்தியரசு தலையிடும் அரசியலமைப்பே சிறந்தது.

எனவே தற்போது பிற்போடப்பட்டுள்ள தேர்தல்களை தேர்தல்களை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்,

அவ்வாறில்லாது புதிய முறையில் நடத்துவதாக கூறி மேலும் தேர்தல்களை பிற்போட்டாலோ சிறுபான்மைக்கு எதிரான புதிய முறையில் நடத்தினாலோ நாம் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை வரும் என்பதை எச்சரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com