நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியதுவம்


இலங்கையில் 200 4ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரை நிலவி வந்த குடும்ப ஆட்சியானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு 2015 ஜனவரி 8ஆம் திகதி பலரதும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட நல்லாட்சியானது ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகிவந்தாலும், பெண்களுக்கான முக்கியதுவம், பெண்களுக்கு அதி உயர் பதவிகளை வழங்குவதன் மூலம் நல்லாட்சி பற்றி பெண்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் வலுப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1931ஆம் ஆண்டு இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேயேர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கையாகும். வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாத போதிலும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல்நாடு என்ற பெருமை இலங்கைக்கே உரித்தாகின்றது.

தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே. இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சனத்தொகையில் 52 வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30 வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாகப் போராடிப் பார்த்தனர் பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக கடந்த ஒரு தசாப்தத்திற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும்இ அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அரசியல் அமைப்புகள் சங்கங்களில் இணைந்து செயற்படும் உரிமை பெண் களுக்கும் உண்டு.இலங்கையின் சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளனர்.

இருப்பினும் பெண்களின் அரசியல் ரீதியான பிரவேசம் மிகவும் குறைந்தளவாகவே உள்ளது.

இலங்கையில் இதுநாள் வரை நடாத்தப்பட்டு வந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடக்கம் ஜனாதிபதித் தேர்தல் வரை பெண்கள் பலர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தாலும்,இவர்கள் அனைவரும் அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. இதற்கமைய இன்றைய நல்லாட்சியில் கூட நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்சினி பெர்னான்டோபுள்ள, ஹிருனிகா பிரேமசந்திர,சுமேத குணவதி ஜயசேனஇ.கீதா குமாரசிங்கஇரோகினி குமாரி கவிரத்னபவித்ரா வன்னியாராச்சிசிறியானி விஜேவிக்கிரமதுசித்தா விஜேமான்னசந்திராணி பண்டார அனோமா கமகேசாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா போன்ற 13 பெண் பிரதிநிதிகளுள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அரசியல் பின்புலத்துடன் அரசியலுக்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே சாதாரணப் பெண்களும் அரசியல் வெள்யோட்டத்தில் இணைந்துக்கொள்வதன் முக்கியதுவத்தினையும், எமது நாட்டின் பாராளுமன்றத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும் அதனைப் பாதுகாக்கின்ற சட்டங்கள் இயற்றப்படும் போதும் வாதப் பிரதிவாதங்கள் செய்பவர்களாக அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது காலம் கடந்த ஞானமாக உணரப்பட்டு நல்லாட்சியில் அதற்கான வழிகோலப்பட்டது. இதற்கமைய இலங்கை அரசியலில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கpனை அதிகரிக்கும் நோக்குடன், மாகாண சபைத் தேர்தல்களுக்காக சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 30 பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்ற சட்ட திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்ததுடன், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றது.

இந்த வெற்றியானது அரசாங்கத்தை விட பெண்களுக்கு நல்லாட்சியில் கிடைத்த வெற்றி என்பது கூறுவதில் தவறில்லை. அத்துடன் இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு நின்று விடாமல் இலங்கை வரலாற்றிலேயே முதலாவது பெண் நீதியமைச்சராக நல்லாட்சியின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி.

தலதா அத்துகோரள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நியமிக்கப்பட்டமையானது நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியதுவத்தினை அதிகம் உணர்த்துவதாய் அமைகின்றது. உலகின் முதலாவது பெண் பிரதமராக திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் உலக அரங்கில் இலங்கை தனது பெயரை பெருமையடையச் செய்ததைப் போலவே இலங்கை முதலாவது பெண் நீதியமைச்சராக அமைச்சர் தலதாவை தெரிவு செய்து நல்லாட்சியில் பெண்களின் வகிபாகத்தை பறைசாற்றியுள்ளது.

மட்டுமின்றி கடந்த கால ஆட்சியின் ஊழல்,மோசடிகளை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட மிகவும் பொறுப்பு மிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதுடன்,இவரின் தலைமையின் கீழ் பல முக்கிய இலஞ்ச,ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவரத் தொடங்கியதுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவையும் நீதிமன்றிட்கு கொண்டு வந்த இவர். தனது தனிப்பட்ட விடயத்திற்காக இவர் தனது பதவியை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி தனது இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மீகஸ்முல்ல – மதிவரி திணைக்களம் நிலுகா ஏக்கநாயக்க – மத்திய மாகாண ஆளுநர்அமரா பியசீலி ரத்னாயக்க – வடமேல் மாகாண ஆளுநர் என பல பெண்கள் நல்லாட்சியில் பல முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையானது தமிழ் பெண்ணொருவருக்கு நல்லாட்சியில் வழங்கப்பட்ட அதிமுக்கியதுவம் வாய்ந்த ஒரு பதவி என்பதுடன், தமிழ் பெண்ணொருவர் இவ்வாறான முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.