நல்லாட்சிக்கு புத்தரைவிட ஞானசார தேரரே பெரியவர்

நல்லாட்சிக்கு புத்தரைவிட ஞானசார தேரரே பெரியவர் என்று முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடந்தவாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து அல்குர்ஆன் சிங்கள பிரதி ஒன்றை கையளித்த போது கடந்த காலத்திலும் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன என்று கூட்டு எதிரணியின் தமிழ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கு

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அளுத்கமை உள்ளிட்ட சில சம்வங்கள் தொடர்பில்மட்டுமே பெரிதாக கதைப்பவர்கள், வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு தான் செய்த அளப்பரிய சேவைகளைப் பற்றி நினைவு கூறுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார் மஹிந்த.

‘உங்கள் ஆட்சியில் புத்த பெருமானை அவமதித்து கருத்து கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட அப்துர் ராசிக்குக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால் நல்லாட்சியில் ஞானசார தேரரை அவமதித்தாக அப்துர் ராசிக்குக்கு ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்’ என்று இச்சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

நல்லாட்சிக்கு

‘நால்லாட்சிக்கு புத்த பொருமானை விட ஞானசார தேரர் பெரியவர் என புன்னகைத்தவாரே இதற்கு பதிலளித்தார் மஹிந்த ராஜபக்ஸ.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]