நல்லாட்சி அரசுக்கு எதிரான போராட்ட களத்தில் குதிக்கும் சிவில் அமைப்புகள்

நல்லாட்சி அரசை உருவாக்க 2015ஆம் ஆண்டு கைகோர்த்து பிரசாரத்தை முன்னெடுத்த சிவில் அமைப்புகளும், சில கட்சிகளும் அரசுக்கு எதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த ஆயத்தமாகியுள்ளன.

இலஞ்ச ஊழல், நிதி மோசடிகளை ஒழிக்க உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசு ஊழல், மோசடிகளை செய்ய இடமளித்துள்ளது உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்திற்காக சோபித்த தேரருடன், நாட்டின் அனைத்து சிவில் அமைப்புகளும், சிறிய கட்சிகளும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தன. ஆனால், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முன்னாள் அரசின் ஊழல், நிதி மோசடிகள் குறித்து இருக்கமான தீர்மானம் எதனையையும் நல்லாட்சி அரசு முன்னெடுத்திருக்கவில்லை.

மறுபுறத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுவந்தன. அதன் உறுதியான வெளிப்பாடு ஜனாதிபதி ஆணைக்குழுவால் ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சாட்சியங்கள் மூலம் வெளியாகியுள்ளதாகல் சிவில் அமைப்புகள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

முன்னாள் அரசை போன்றே தற்போதைய அரசும் ஊழலுக்கு இடம்கொடுத்துள்ளதாக கூறி 15ஆம் திகதி சத்தியாக்கிரக் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் களந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]