நரேந்திர மோடி நாளைய தினம் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கின்றார்

மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமெரிக்காவின் வொஷிங்டன் விமான நிலையத்தை பிரதமர் மோடி அடைந்தபோது, அமெரிக்க வாழ் இந்திய மக்கள் ‘பிரதமர் நரேந்திர மோடி’ என கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

நாளைய தினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்