நரேந்திர மோடியைச் சந்தித்தார் ரணில் : இருதரப்பு பொருளாதார உடன்படிக்கையும் கைச்சாத்து

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலானச் சந்திப்பு புதுடெல்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதுடன், உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூம், அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே கைச்சாத்திட்டனர்.

நரேந்திர மோடியைச் சந்தித்தார் ரணில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]