நயினாதீவு நாகஅம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான கலந்தரையாடல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நயினாதீவு நாகஅம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்மாகவுள்ளமையினால் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

நயினாதீவு நாக அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (01) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கடற்படைஇ பொலிஸார் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர் படகு உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் பதின்நான்காம் திகதி இருந்து 29 ஆம் திகதி வரை காலை 5 மணியளவில் இருந்து பேருந்துகள் குறிகட்டுவானிற்குப் புறப்படும்.

காலை 6 மணியில் இருந்து குறிகட்டுவானில் இருந்து படகுகள் சேவையில் ஈடுபடும். மாலை 6 மணிமுதல் படகுச் சேவைகள் நயினாதீவில் இருந்தும்இ பேருந்துகள்இ இரவு 7.30 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும்.

படகுகள் சரியான பராமரிப்பிற்குட்டுத்துவதற்கான பரிசீலணைகளை துறைமுக அதிகார சபையினர் பரிசீலணைகளை மேற்கொள்வார்கள். துறைமுக அதிகார சபையினர் சிபார்சின் படி எத்தனை பயணிகள் படகுகள் ஏற்ற முடியும். படகுகளின் பயன்பாடுகள் தொடர்பிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும். அதேவேளைஇ விசேட திருவிழா நாட்களில் அதிகமான பஸ் சேவைகள் மற்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதனால் படகு கட்டணம் அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர் படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.

நயினாதீவு நாகஅம்மன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]