நயன் நடித்த அந்த தெலுங்கு படத்தின் காப்பியா விஸ்வாசம்???

இன்று அஜித்தின் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வெளியானது. சிவா இயக்கி இருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தற்போது என்ன விடயம் என்றால் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான துளசி படத்தின் காப்பி என கூறப்படுகிறது. காரணம் என்ன என்றால் இந்த இரண்டு படங்களின் மையக்கருத்தும் ஒன்று தானாம்.

கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பிறகு மகனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார்? குடும்பத்துடன் எப்படி இணைக்கிறார் என்பது தான் துளசி படத்தின் கதை.

இதுதான் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. தற்கால ட்ரெண்டிற்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி படத்தை எடுத்துள்ளனர்.

இது படத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]