நயன்தாரா படத்தில் பாடிய அனிருத்!

தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஹொரர் படமான இதில் தீய சக்திகளை அழிப்பவராக நயன்தாரா வருகிறார்.

இந்தப் படத்தில் அனிருத் குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டோரா படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ரா ரா ரா எனத் தொடங்கும் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

டோரா தவிர நயன்தாரா கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள், அறம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.