நயன்தாரா காலில் விழுவதா என லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்

நயன்தாரா காலில் விழுவதா என லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்

லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சமீபத்தில் நயன்தாரா நடித்த அறம் படத்தை பார்த்துள்ளார்.

இப்படத்தை பார்த்த இவர் படம் தனக்கு மிகவும் பிடித்ததாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தார், அதோடு நிறுத்தாமல் சில விஷயங்களையும் பேசியுள்ளார்.

இதில் குறிப்பாக நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள், அவரின் திறமைகளை நாங்கள் பார்க்கவிடாமல் செய்யாதீர்கள்.

மேலும், அறம் படத்தில் கிளைமேக்ஸில் நயன்தாராவின் காலில் விழும்படி ஒரு காட்சி இருக்கின்றது, பெற்றோர்களை தவிர்த்து வேறு யார் காலிலும் விழக்கூடாது.

அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, தமிழகம் காலில் விழும் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]