நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் – புகைப்படம் உள்ளே!!

கடந்த மாதம் பட தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் காரணமாக நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஓய்வு கிடைத்தது.

இதையடுத்து இருவரும் மீண்டும் அமெரிக்கா பறந்தார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் நடந்த பிரபல கோச்செல்லா இசை-கலை விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படத்தை விக்னேஷ்சிவன் அவருடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகியவற்றில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

அதில், ‘எனது நட்சத்திரத்துடன் சென்ற இசை பயணம் இனிய அனுபவம்’ என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவும், விக்னேஷ் சிவன் தன்னை கட்டி அணைத்திருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]