நயன்தாராவின் உண்மை காதலர் இவர்தானாம் – புகைப்படம் உள்ளே..

இவர் தான் என்னுடைய காதலர் என்ற உண்மையை நயன்தாரா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. எல்லோராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுகிறார். வருடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவரும், நானும் ரௌடி தான் புகழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் வெளிப்படையாக தங்களது காதல் பற்றி தெரிவிக்கவில்லை. எனினும், இருவரும் நெருங்கியிருக்கும் புகைப்படங்கள், பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்றவை மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில், தற்போது காதலர் விக்னேஷ் சிவன் பற்றி முதன் முறையாக பொது மேடையில் நடிகை நயன்தாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமீபத்தில், நயன்தாரா சென்னையில் ஒரு ஊடக நிறுவனத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் விருது ஒன்றை பெற்றார். அப்போது பேசிய அவர் கூறுகையில், அம்மா, அப்பா, சகோதரர், காதலர் என்று அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை நான் வாங்கிய விருதுகளில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. என்னைச் சுற்றியுள்ள பெண்கள்

ஆனால், விக்னேஷ் சிவனை தனது காதலர் என்று முதன் முதலாக நயன்தாரா கூறியதைக் கேட்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நயன் – விக்னேஷ் ஆகியோர் தொடர்பாக இதுவரை பரவி வந்த வதந்திக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இனி திருமண அழைப்பிதழ் மட்டும் தான் மீதமுள்ளது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் தெரிவித்தால் மாப்பிள்ளையும் ரெடி, பொண்ணும் ரெடி, அப்புறம் என்ன இனி திருமணம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]