நம்ம டிடியா இது?? அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே!!

டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வளம் வருபவர்.இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.கடந்த 2014ஆம் அண்டு ஜூன் 29ஆம் திகதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் காதல் திருமணம். இதனால் டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடப்பதற்கு டி.டி கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்த்க்கும் பிரச்சினை ஏற்பட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்றனர்.

இதேவேளை, தற்போது, படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கணவரை பிரிந்த சோகத்தில் இருந்து மீண்டு விட்டது போல குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படத்தில் முன்பு இருந்ததை விட டிடி அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.கசந்து போன திருமண வாழ்க்கை இருண்டு போகாமல், டிடி மீண்டும் அவரின் கணவர் ஸ்ரீகாந்த்துடன் இணைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]