நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின்னர், 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியால் ஏப்ரல் 4ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக யாராலும் எதிர்பார்க்கப்படாத சக்திகள்,  ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]