நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணி சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு ஆதரவாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்களும், அந்தக் கட்சியின் பக்கமுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 1 உறுப்பினரும் உள்ளனர்.

எனினும், அதுரலியே ரத்தன தேரரும், விஜேதாச ராஜபக்ஷவும், தற்போது சுதந்திரமான உறுப்பினர்களாகச் செயற்படும் நிலையில், ஐதேகவுக்கு 105 உறுப்பினர்களே இருக்கின்றனர்.

அதேவேளை, கூட்டு எதிரணிக்கு 52 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]