நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் கையெழுத்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.

பண்டாரநாயக்க ஞபாகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தவறுகள் செய்யும் போது அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.