நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிரணியினர் கையெழுத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிரணியினர் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து இன்றைய தினம் எதிரணியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.