‘நம்பிக்கையில்லா பிரேரணை’க்குப் போதிய ஆதரவு இல்லை

நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ‘நம்பிக்கையில்லா பிரேரணை’க்குப் போதிய ஆதரவு இன்மையால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப் போவதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்திருந்தது.

பின்னர், கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைப்பை ஒன்றிணைந்த எதிரணி ஒத்திவைத்திருந்தது.

தற்போது, இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]