நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐ.தே.கவினர் கையொப்பம் – ஒன்றிணைந்த எதிரணி

நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ‘நம்பிக்கையில்லா பிரேரணை’யில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒன்றிணைந்த எதிரணி ஆதரவு வழங்கும். என்றும் இந்தப் பிரேரணை அடுத்துவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தெரிவித்த அளுத்கமகே, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களும் அதில் கையெழுத்திடுவோம் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]