நம்பிக்கையில்லா பிரேரணையால் சுதந்திரக்கட்சிக்குள் பிளவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தனர்.

சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மஹிந்த அமரவீர, சரத் அமுனுகம, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திசநாயக்க, பைசர் முஸ்தபா, மகிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜித் விஜிதமுனி சொய்சா, பியசேன கமகே, மோகன் லால் கிரேரோ, சிறியானி விஜேவிக்கிரம, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஹிஸ்புல்லா, ஏ.எச்எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, சாரதி துஸ்மந்த, மனுச நாணயக்கார, மலித் ஜெயத்திலக, வீரகுமார திசநாயக்க, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், நிசாந்த முத்துஹெட்டிகம, இந்திக பண்டார நாயக்க ஆகியோர் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]