நம்பிக்கையில்லாப் பிரேரணையா!! சபாநாயகருக்கு எதிராகவா???

நம்பிக்கையில்லாப் பிரேரணையா!! சபாநாயகருக்கு எதிராகவா???

நாடாளுமன்றத்தினை சபாநாயகர் கரு ஜயசூரிய தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டுவாராயின் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தரப்பிலான ஆளும் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

பாராளுமன்றத்தினை ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஒத்திவைத்திருந்தார். ஆதலால் பாராளுமன்ற கூட்டத்தொடரினை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதிக்கு மற்றுமே உரிமையுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு வரும்வரை பாராளுமன்ற கூட்டத்தொடரினை சபாநாயகரால் கூட்டமுடியாது, ஆகையால் சபாநாயகர் அவ்வர்த்தமானி அறிவிப்பை மீறி நாடாளுமன்றத்தினை கூட்டுவாராயின் அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவும் என ஆளும் தரப்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என நம்பகத்தன்மையான தகவல்கள் கசிந்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சிகளை மேற்கொள்வதாக, செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்தே, ஆளும்தரப்பு மேற்கண்டவாறு ஆலோசித்துவருவதாக அறியமுடிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]