நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி முடிவு செய்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்த நிலையில், கண்டியில் ஏற்பட்ட கலவரங்களினால், அந்தத் திட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]