நம்பிக்கையில்லாத் தீர்மானம் : எதிரணியும் தேசிய அரசும் ஏட்டிக்குப் போட்டியாக கூடுகிறது

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பொது எதிரணி இன்று கூடி கலந்துரையாடவுள்ளதாக எதிரணியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை, ஏட்டிக்குப் போட்டியாக தேசிய அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இவ்வாரம் கொழும்பில் கூடி இந்த விவகாரம் தொடர்பில் ஆராயவுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க முக்கிய பாத்திரம் வகித்துள்ளதாக இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கட்டிருந்தது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதிதாக குடியேறிய மொனார்க் ரெஸிடன்ஸியின் வீட்டை பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவன தலைவர் அர்ஜூன அலோசியஸ் பெற்றுக்கொடுத்ததாகவும் அதற்கான வாடகையையும் அவர்தான் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டாம் திகதி விசாரணைகளுக்காக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்த குற்றச்சாட்டுகளை மறுதளித்திருந்தார். அவரின் பதில்கள் அனைத்தும் பொறுப்பற்ற விதத்தில் இருந்தன. அத்துடன், சிங்கப்பூரில் அர்ஜுன அலோசியஸுன் நடத்திய சந்திப்புகள் பற்றியும் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக தேசிய அரசிலும், எதிர் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுபெற்றன. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ரவி கரணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பொது எதிரணி சபாநாயகர் கருஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. இது குறித்து தீர்க்கமாக கலந்துரையட எதிரணியின் தலைவர்கள் நாளை கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையில் கூட உள்ளதாக அறிய முடிகிறது.

ஐ.தே.க. ஏற்கனவே விசாரணைகள் முற்றுபெறும் வரை ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தோற்கடிப்போம் என்று திட்டவட்டதாக அறிவித்துவிட்டது. என்றாலும், சு.கவின் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்கவை உடனடியாக பதவியில் இருந்து விலக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சு.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

எனவே, பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தேசிய அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இவ்வாரம் கூடவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக பாதையில் இரண்டாம் கட்டத்தை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பொது எதிரணியும், தேசிய அரசும் பல்வேறு கருத்துகளை கூறிவரும் நிலையில், இவ்வாரம் இந்த விடயம் குறித்த பதில் இருதரப்பில் இருந்தும் வெளியாகவுள்ளதால் அரவியல் அரங்கு பெரும் பரபரப்படைந்துள்ளது.

205ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை மத்திய வங்கியில் விநியோகிக்கப்பட்ட அனைத்து பிணைமுறிகள் தொடர்பிலும் விசாரணை செய்யும் முகமாக உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர்களான கே.டி. சித்திரசிறி, பி.எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் கணக்காளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]