‘அவன் நினைவை மறக்க மறுபடி நடிக்கிறேன்!’

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் ‘மைனா’வாக நடித்த நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்குக் காரணமாக பல செய்திகள் வலம்வந்தன.

அந்த இழப்பைத் தாண்டி, டி.வி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நந்தினி. தற்போது விஜய் டி.வியின் ‘நீலி’ சீரியலில் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த மாதம் ஆறாம் திக, நந்தினி – கார்த்திகேயனின் முதலாமாண்டு திருமண நாள். அந்த நாளின் நினைவோடு நம்மிடம் பேசினார் நந்தினி.

”வலி, வேதனையோடுதான் ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கும் போய்ட்டிருக்கேன்.என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே பெருசா செட்டிலானவங்க கிடையாது.

அவங்களோடு என் தம்பியும் இருக்கான். அதனால், அவங்களைப் பார்த்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. என்னை நம்பியிருக்கிற இந்த மூன்று பேருக்கும் சேர்த்துதான் உழைச்சுட்டிருக்கேன்.

இந்த ஜூன் ஆறுதான் நாங்க கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் நிறைவடைஞ்ச நாள். ‘நம்ம பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சே’னு அம்மா அழுதாங்க. அப்பா வேதனையை வெளியில் காட்டிக்கலை. அந்த நாளில் கார்த்தியை அடக்கம் பண்ணின இடத்துக்குப் போய் பிரே பண்ணிட்டு வந்தேன்” என்கிறார் நந்தினி.

ஒரு பொண்ணுக்கு இருக்கிற ஆசைகளைக்கூட நான் அனுபவிச்சது கிடையாது. ஆனா, அதற்கு ஈடான பாசத்தைக் காட்டினான். இப்பவும் கார்த்தி எங்கேயும் போயிடலை. என்னோடுதான் இருக்கான். ஒவ்வொரு நிமிஷமும் அவன் நினைவு எனக்குள் ஓடிட்டிருக்கு. அவன் நினைவை மறக்கவே மறுபடியும் நடிக்க வந்திருக்கேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]