நண்பர்கள் தினத்தில் தங்களது அன்பை பரிமாறிக் கொண்ட நயன்-விக்கி ஜோடிகளின் புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
சமீப காலமாக கோலிவுட் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி பேசப்பட்டு வருபவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்களுக்குள் இருப்பது காதாலா? நட்பா என்ற கேள்விக்கு இன்றளவும் விடை கிடைக்காமல் அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டிக் கொள்வதும் இந்த ஜோடிகளுக்கு வாடிக்கையான ஒன்று தான்.
இந்த நிலையில், நேற்று உலகெங்கும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், ஆஃபிஸ்மேட்ஸ் என பல்வேறு தரப்பினரும் தங்களுடைய நண்பர்களுடன் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.
இந்த நண்பர்கள் தினத்தில், நயன்-விக்கி ஜோடி ஒன்றிணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். நெருக்கமாக முகத்தோடு முகம் ஒட்டியவாறு இருக்கும் புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக்ஸை போட்டு அவர்களை அதகளப்படுத்தியுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]