நட்டஈடு தொடர்பில் அமைச்சரவையில் முரண்பாடு

அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பது தமது அமைச்சுக்கு உட்பட்ட விடயம் என்று அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இருந்தும், அதில் தலையிட்டுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வஜிர அபேவர்தன, நட்ட ஈடு வழங்கும் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய முறையின் கீழ், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக நட்டஈட்டை வழங்குவதாக கூறியுள்ளார்.

இதன்போது, அமைச்சர்களுக்கு இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவமானது, அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு உரித்துடைய விடயம் எனவும், இந்த விடயம் குறித்து இரண்டு தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]