நட்சத்திர விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து வேட்டை நடாத்திய காரைநகர் இளைஞர்கள்

காரைநகர் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து வேட்டை நடாத்திய காரைநகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்,

எதிர்ப்பு கடிதம் மற்றும் கையெழுத்து படிவம் அடங்கலான மகஜரை பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் அவர்களிடம் கையளித்தனர்.

இன்று காலை சைவமகாசபை தலைவர் வைத்தியர் பரா நந்தகுமார் அவர்களால் ஊர்காவற்துறை மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வின்னப்பம் நீதாவானால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைதியான முறையில் காரைநகர் இளைஞர்களால் கையெழுத்து வேட்டை நடாத்தி மகஜரும் கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் தாம் இது தொடர்பாக அரசாங்க அதிபரிக்கு தெரியப்படுத்தி விரைவாக ஒரு காத்திரமான பதிலை தருவதாகவும், பிரதேச சபை தவிசாளர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் தான் இது தொடர்பாக எந்த கருத்து தெரிவிக்க முடியாதென வும், தொடங்கப்பட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]