நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி- தலவாக்கலை பிரதான வீதியில் பயணித்த ஆட்டோ, கெட்டபுலா சந்தியில் வைத்து நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பயணித்துக் கொண்டிருந்த நிலையில், ஆட்டோ தீடீரென தீப்பற்றிய நிலையில், ஓட்டுனரும், பயணியும் ஆட்டோவை விட்டு வெளியில் பாய்ந்து தப்பியுள்ளனர்.

பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்த நிலையில், ஆட்டோ முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]