நடுவானில் பறந்த விமானத்தில் பணிப்பெண்ணின் இடுப்பை கிள்ளிய நபர்- பின்னர் நடந்த விபரீதம்

இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சிங்கப்பூர் விமானத்தில் வைத்து பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பரஞ்சபி நிரஞ்சன் ஜெயந்த் எனும் 34 வயதுடைய இளைஞர் சிட்னி நகரில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஸ்கூட்’ நிறுவன விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

விமானத்தில் பயணிகளை கவனிக்கும் பணியில், 25 வயதான விமான பெண் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

அந்த பணிப்பெண்ணிடம் அடிக்கடி “நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்ரீர்கள்” என ஜொள்ளுவிட்டபடி அந்த இளைஞர் ரகளை பண்ணினார்.

அதுமட்டுமன்றி அந்த பெண்ணிடம் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டும் பலமுறை தொல்லை கொடுத்தார்.

இவை எதுக்கும் அந்த பெண் இறங்கி வரவில்லை. எனினும் அந்த இளைஞர் சளைக்காமல் தொல்லை கொடுத்து கொண்டே வந்தார்.

பின்னர் விமானம் தரையிறங்க சில நேரத்துக்கு முன்னர் அந்தப் பெண் ஊழியரை அணுகி அவரது இடதுபுற இடுப்பை கைகளால் பலமாக தடவி அந்த இளைஞர் சில்மிஷம் செய்தார்.

இளைஞரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் தனது அதிகாரியிடம் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை சில்மிஷ பேர்வழி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வந்த சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]