நடுவானில் குலுங்கிய விமானம் – அதிர்ச்சியடைந்த பயணிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து மலேசியாவுக்கு ஏர்-ஆசியா விமானம் புறப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகள் அதில் இருந்தனர்.

நடுவானில் சென்றபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் தொடர்ந்து குலுங்கியது. சலவை எந்திரம் ஓடிக்கொண்டிருக்கும்போது எவ்வாறு குலுங்குமோ, அதேபோன்று அது குலுங்கிக் கொண்டே இருந்தது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

உடனே விமானம் திருப்பப்பட்டு மீண்டும் பெர்த் நகரில் வந்து தரையிறங்கியது. எந்திர கோளாறு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு நிகழாமல் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]