முகப்பு Sports நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸிற்கு அபராதம்

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸிற்கு அபராதம்

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸிற்கு அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக செரினா வில்லியம்ஸிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குவாதம் மட்டுமல்லாது அவரது ஏனைய நடவடிக்கைக்காகவும் 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்துள்ளதோடு, இந்தப் போட்டியில் அவர் மூன்று விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

முதலாவது குற்றச்சாட்டாக அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தமை, இரண்டாவதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தமை, மூன்றாவதாக நடுவர் ஒரு பொய்யர் என்று கூறிய குற்றச்சாட்டுக்கள் செரீனா மீது வைக்கப்பட்டது.

இதனையடுத்து, செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்த நிலையில், நடுவர் என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார். என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

எனவே செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம், நடுவர்களை நோக்கி செரீனா கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக 10 ஆயிரம் டொலர்களையும், பயிற்சியாளருக்கு சைகை காண்பித்ததற்காக 4 ஆயிரம் டொலர்களையும் ஏனைய குற்றங்களுக்காக 3 ஆயிரம் டொலர்கள் என மொத்தமாக 17 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதம் விதித்துள்ளது.

இத் தொகையானது இலங்கை நாணய மதிப்பில் 27 இலட்சம் ரூபா பெறுமதியாகும்.

மேலும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com