நடுரோட்டில் பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம் – இப்படியெல்லாமா பன்னுவாங்க!!

நடுரோட்டில் நடந்து சென்ற நடிகை ரெஜினாவின் உதட்டை பிடித்து ஒரு இளைஞர் இழுத்துள்ளார்.

நடிகை ரெஜினா ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரெஜினா, செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, படத்திலும் மற்றும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ஒரு சில படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். ‘‘ஒரு சமயம் சென்னையில் நண்பர்களுடன் ஈகா தியேட்டரின் பாலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு இளைஞர் திடீரென என்னுடைய உதட்டை பிடித்துவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத நான் அதிர்ந்து போனேன். அந்த இளைஞனை எனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வாத்தைகளிலும் திட்டி, துரத்தியதாகவும்’’ தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]