நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு? – ஏஏஏ படத்தால் வந்த வினை !

ஆதிக் ரவிச்சந்திரனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம் சிம்பு. அடல்ட் ஒன்லி படம் எடுக்கத் தான் நான் லாயக்கு என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவை வைத்து நான் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறும் என்றார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் படத்தை பார்த்தவர்கள் பிட்டு பட இயக்குனர் ஆதிக் என்று முத்திரை குத்திவிட்டனர்.

AAA Movie

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து சிம்புவின் பெயர் ஏகத்திற்கும் டேமேஜாகிக் கிடக்கிறது. படத்தை பார்த்த சிம்பு ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.

நடிப்பில் ஆர்வம் இல்லை ஆனால் என் ரசிகர்களுக்காக நான் படங்களில் நடிக்கிறேன் என்று சிம்பு அண்மையில் தெரிவித்தார். ஏஏஏ படத்தை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்ததை அடுத்து சிம்பு தனது முடிவை மாற்றியுள்ளாராம்.

நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்பு. அதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். நடித்தது போதும் இனி இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

புதுமுகங்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு. அந்த படத்தை அவரின் தந்தை டி. ராஜேந்தர் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]