நடிக்க வரும் முன் ஆசிரியையாக பணியாற்றினாரா? தோணி பட நடிகை!

நடிகை கியாரா அத்வாணி MS தோணி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இந்த படத்திற்கு பின் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடிக்க வரும் செய்த தொழில் பற்றி கூறியுள்ளார். இவரது அம்மா ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். படித்து முடித்ததும் சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினாராம். அதோடு சேர்த்து பள்ளியில் ஆசிரியையாகவும் சேர்ந்து பணியாற்றினாராம்.

“ப்ளே ஸ்கூல் என்பதால் 8 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை இருப்பார்கள். அவர்களுக்கு பாடம் நடத்தும் போது ஆடுவேன் பாடுவேன். என் நடிப்பு திறமை வளர்த்துக்கொள்ள அது உதவியது. குழந்தைகளை பார்த்துக்கொள்வது கஷ்டமான வேலை. காலை 6.30 மணி துவங்கி மதியம் பணி முடிவதற்குள் சோர்வடைந்துவிடுவேன். சில சமயங்களில் குழந்தைகளில் டயாபரை கூட மாற்றி விட்டுள்ளேன். வேலை முடிந்து வீடு வந்தால் தூங்கிவிடுவேன். ”

“அதன் பிறகு 8 மாதங்கள் கழித்து முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் பள்ளியில் ராஜினாமா செய்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]