நடிகை ஸ்ரீதேவியின் இறுதிநாள் வீடியோ – அதிர்ச்சியில் திரையுலகினர்

தங்களது 22வது திருமண நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் தனது மனைவியின் டுவிட்டர் பக்கத்தில் அழகிய நினைவுகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகை ஸ்ரீதேவியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

திரையில் நடிகை ஸ்ரீதேவியை பார்க்கும்போதே, எனக்கு அவர் மீது ஒரு இனம்புரியாத காதல் வந்தது. அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, இறுதியில் நாங்கள் ஒன்றிணைந்தோம் என தனது மனைவியின் இறப்புக்கு பிறகு காதல் நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

துபாயில் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்றபோது ஹோட்டலில் வைத்து ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

தனது மனைவியின் இறப்பில் இருந்து தற்போது சிறிது மீண்டு வந்துள்ளதாக கூறியுள்ள போனி, இனி தனது இரண்டு மகள்களின் எதிகாலத்தில் அதிக கவனம் செலுத்தபோவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று ஸ்ரீதேவி – போனி தம்பதியினிரின் 22 வது திருமணநாள். இதனை முன்னிட்டு போனி, நடிகை ஸ்ரீதேவியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, எனது மனைவி என்றும் அவள் நினைவுளோடு என்னுடன் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

போனி கபூர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவானது, ஸ்ரீதேவி கடைசியாக துபாயில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஸ்ரீதேவியின் இந்த இறுதியான மகிழ்ச்சி நாள் வீடியோ பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]