முகப்பு Kisu Kisu - UT Gossip நடிகை லக்ஷ்மி மேனனின் அழகிய புகைப்படம் உள்ளே

நடிகை லக்ஷ்மி மேனனின் அழகிய புகைப்படம் உள்ளே

கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை லக்ஷ்மி மேனன். பக்கத்து வீட்டுப்பெண் என்ற இமேஜ் அம்மணியின் முகத்தில் தாண்டவம் ஆடியதால் வெகுவான ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்தன. இந்நிலையில், திடீரென உடல் எடையை அதிகரித்து ஆளே மாறிப்போனார். மேலும், சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறாமல் போனது. இதனால், சினிமாவில் இருந்து ஒதுங்கினார் லக்ஷ்மிமேனன். தொடந்து படங்களில் நடித்துவந்தவர் சென்ற வருடம் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடிக்க சொந்தஊருக்கு சென்று விட்டார். ஆனால், படிப்பை மட்டுமே கவனிக்காமல் தன்னுடையை உடலமைப்பிலும் கவனம் செலுத்தி 15 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் அம்மணியின் பள்ளிப்படிப்பு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து படங்களில் மீண்டும் நடிப்பார் என கூறுகிறார்கள் லக்ஷ்மிமேனனுக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

தன்னுடைய இரண்டாவது சுற்றில் கவர்ச்சிக்களம் இறங்கவுள்ளார் லக்ஷ்மி மேனன். படத்திற்கு தேவையென்றால் பிகினி உடை அணிந்து நடிக்கவும் தயார் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com