நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே

‘சுந்தர புரு‌ஷன்’ படத்தில் கதாநாயகியான ரம்பா உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, தேசிய கீதம், மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் லாண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர். ரம்பாவுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாரானார்கள். ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர்.

சகோதரரின் மனைவி ரம்பாவுக்கு எதிராக ஐதராபாத் போலீசில் புகார் அளித்த சர்ச்சைகளும் நடந்தன. தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரம்பா 3–வது தடவையாக கர்ப்பமானார். இப்போது அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடந்துள்ளது. கணவர் இந்திரகுமார் பத்மநாதனே அவருக்கு சீமந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]