நடிகை மாளவிகாவின் தற்போதைய நிலை- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர்களில் நடிகை மாளவிகாவும் ஒருவர். முன்னணி வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னர் 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை.

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், கார்த்திக், அஜித், முரளி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதே நேரத்திலேயே தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் அசரடித்தது. மறுபடியும் மாளவிகாவின் சினிமா கேரியரில் படங்கள் வரிசையாக வரத் தொடங்கின.

தொடர்ந்து வந்த ‘திருட்டுப் பயலே’ படத்தில் அவரது நெகட்டிவ் ரோல் மாளவிகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து மறுபடியும் பிஸி ஆனார் மாளவிகா. தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். சொன்னதோடு நில்லாமல், திருமணத்திற்குப் பிறகு நடித்த ஒரு படத்தில் கிளாமர் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார். மேலும், சில படங்களில் கெஸ்ட் ரோலில் தலையைக் காட்டியவர் அதன் பிறகு ஆளையே காணோம்.

தற்போது மாளவிகாவிற்கு 38 வயதாகும் நிலையில் அவர் பிட்டாக இருக்க யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்கள் இதோ ;

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]