நடிகை நடாஷா சூரிக்கு ஏற்பட்ட விபரீதம்- மயிரிழையில் உயிர் தப்பினார்!!

அண்மையில் இந்தோனேஷியா சென்ற பாலிவுட் நடிகை நடாஷா சூரி, அங்கு கடை திறப்பு விழா முடிந்ததும் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.

அப்போது பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார்பாலிவுட் நடிகை நடாஷா சூரி.

இதனையடுத்து தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 மணி நேரத்திற்கு நடாஷா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.