நடிகை டாப்சி ஏற்பட்ட பரிதாப நிலை- மேடையில் கதறி அழுததால் ரசிகர்கள் அதிர்ச்சியில்!!

தமிழ், தெலுங்கு என வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த நடிகை டாப்சி பாலிவுட்டில் கால் பாதித்தார். ஹிந்தி சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ப்பு கொடுத்துள்ளது. சமீபத்தில், வெளியான இவரின் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது டாப்சியின் மார்க்கெட் வேறு லெவலில் உள்ளது.

முதலில் சிரமப்பட்டு சினிமா உலகிற்கு நுழைந்தாலும், அதன்பிறகு படிப்படியாக மிகப்பெரிய நடிகையாக மாறி வருகிறார் டாப்சி. அது மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார். இன் நிலையில் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பலர், முகம் தெரியாத நபர்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகின்றனர்.

அது போலவே சமீபத்தில் நடிகை பார்வதிக்கு மம்முட்டி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் . அதனையடுத்து அவர்களில் சிலர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். தற்போது இதற்காகவே ஒரு புதிய தனிப்படையை ஒரு அமைப்பு உருவாக்குகிறது.

டிரால் போலீஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கும் அந்த அமைப்பில் பல்வேறுகுலுக்கல் மற்றும் பிரைவேட் துப்பறிவாளர்களும் இணைந்து இது போல் நடிகைகளை வம்பிக்கிழுக்கும் ரசிகர்களை வலைவீசிப் பிடிக்க உதவுவார்கள்.

மேலும் அவர்கள் இணையதளத்தில் வம்பிழுக்கும் நபர்களைத் தேடிப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி கலந்துகொள்கிறார். டாப்ஸியைப் பொறுத்தவரை அவர் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இதனாலேயே அவர் பல சிக்கல்களில் சிக்கி தவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அவருக்கு நிறைய மீம்ஸ் போட்டுப் பலமுறை கிண்டல் செய்துள்ளனர். இதனால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அதில் இருந்து தான் மீண்டு வந்த விவரங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனக்கு வந்த இந்த நிலைமையை போல் இனி யாருக்கும் வரக்கூடாது என்று டாப்ஸி உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]