நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே

பிரபல காமெடி நடிகை மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் பல காமெடிகளில் ஜாங்கிரி காமெடியும் ஹிட் ஆனது. அதன் பின்னர் இவரை ரசிகர்கள் ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரை கொடுத்து விட்டனர்.

இறுதியாக அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வந்தன. அதன்படி இன்று மதுமிதா மற்றும் மோசஸ் ஜோயலின் திருமணம் முடிந்துள்ளது.

மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]