தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரசிகர்களால் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்ட பெருமை குஷ்புவிற்கே. தனது சினிமா வாழ்க்கையை முதலில் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த இவர் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கொடி கட்டிப் பறந்தார்.

ரஜினி, கமல் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார். பிறகு தமிழ் இயக்குனர் சுந்தர்.சியை மணந்து தமிழ் நாட்டு மருமகள் ஆனார். சில சின்னத்திரை சீரியல்களிலும், பிரபல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

மக்கள் மனதில் இன்று வரை இடம் பிடித்திருக்கும் குஷ்பு தற்போது சுந்தர்.சி இயக்கும் படத்தில் சிம்பு விற்கு அத்தையாக நடித்து வருகிறார். இன்று மகிழ்ச்சியுடன் தனது 47 வது பிறந்தநாளைக் 29ஆம் திகதி விமர்சையாக கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]