நடிகை கங்கனா ரனாவத்தின் ரோல் மாடல் பிரதமர் மோடியாம்

பெண்களுக்கு ஏற்ற நல்ல ரோல் மாடல் பிரதமர் மோடி தான் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை கங்கனா ரனாவத்தும் ஒருவர். எப்போதும், சர்ச்சையாக பேசி கேலி, கிண்டலுக்கு உள்ளாகிக் கொள்வதில் முதலிடம் பிடிப்பவர். மனதை பட்டதையெல்லாம் பேசி வம்பில் சிக்கிக் கொள்வார். இந்த நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண்களுக்கு ரோல் மாடலாக இருப்பது பிரதமர் மோடி என்று கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றத்தை பார்க்க விரும்புகிறேன். இந்தியா வளராவிட்டால் நான வளர முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு இருக்கும் ஒரே அடையாளம் நான் ஒரு இந்தியன் என்பது தான். நான், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகை. நாட்டில் இருக்கும் பெண்களுக்கு எல்லாம் ஏற்ற ரோல் மாடல் அவர் தான். ஒரு சாதாரண டீக்கடை வியாபாரியாக இருந்த அவர் இப்போது நாட்டின் பிரதமராகியிருப்பது அவரது வெற்றி அல்ல ஜனநாயகத்தில் வெற்றி. இதனால், அவர் தான் சரியான ரோல் மாடல்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியப் படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறுவது எப்போதும் சரியல்ல. தேசிய கீதத்தைக் கேட்டால் அமெரிக்கர்கள் எழுந்து நிற்கிறார்கள். நாம் ஏன் எழுந்து நிற்க வெட்கப்பட வேண்டும்?

நாளுக்கு நாள் நாட்டைப் பற்றி குறை கூறிக்கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் உள்கட்டமைப்பு சரியில்லை. அசுத்தமாக உள்ளது என்று இளைஞர்கள் புகார் கூறி வரும் நிலையில், ஏன் அசுத்தத்தை சுத்தம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன விருந்தாளியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]